பாஜகவுடன் சேர்ந்தாலே தோல்விதான் என பேசிக் கொண்டிருந்தவர்கள், தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வென்றிருக்கலாம் என பேசுவதை கேட்க மகிழ்ச்சியாக இருப்பதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வெற்றி கிடைக்காதது தொண்டர்களை போல தனக்கும் கவலை அளிப்பதாகவும், அதைவிட எந்த பயனுமில்லாத திமுக கூட்டணிக்கு அதிக இடம் கிடைத்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.