என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜா உடல் தகனம்

70பார்த்தது
கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ரவுடி சீசிங் ராஜா (49) தனிப்படை போலீஸாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். பின்னர் பார் உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை பறிமுதல் செய்ய நீலாங்கரை அடுத்த அக்கரைக்கு அழைத்துச் சென்ற போது போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் போலீஸார் தற்காப்புக்கு சுட்டதில் ரவுடி சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் நேற்று இரவு அவரது முதல் மனைவி ஜானகியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று மதியம் சுமார் 2: 10 மணியளவில் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் உடல் வீட்டிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிட்லபாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இளைய மகன் லோகேஷ் இறுதி சடங்குகளை செய்தார். உடல் தகனம் செய்யப்பட்டவுடன் உடனடியாக ஊர்வலத்தில் வந்தவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி