முதுநிலை மருத்துவ படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து 15 படிப்புகளை நீக்குவதற்கான அரசாணையை, தமிழக அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. 50% இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படும் நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணையில் 15 படிப்புகள் நீக்கப்பட்டது. இந்த சூழலில், அரசு மருத்துவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது