சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் பெட்டிகளை வாங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் குறைந்து மக்களும் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு விரைவாக சென்று வருகின்றனர். ஐடி, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் அதிகளவில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். ஒருநாளைக்கு சாரசரியாக 2. 50லட்சம் பேர் மெட்ரோ ரயலில் பயணம் செய்கின்றனர்.
சென்னையில் முடிவடைந்துள்ள முதல்கட்ட மெட்ரோவில் 54 ரயில்கள் பயன்பாட்டில் உள்ளது. இருந்தாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவில் கூட்டம் அலைமோதுவதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 30 பெட்டிகளை வாங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்து இதற்காக ரூ. 300கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது.