சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக புறநகர் பகுதிகளுக்கு இயங்கும் 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயிலில் தினமும் மூன்று லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர். சென்னை-விழுப்புரம் வழித்தடத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3. 15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கும் 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. வசதிக்காக காலை 9. 40, 10. 20, 10. 55, 11. 30, 12, 12. 20, 1. 0, மணிக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.