சென்னை: கே. கே நகரில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கே. கே நகர் வடபழனி நெசப்பாக்கம் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. மெட்ரோ பணிகளுக்காக இந்த சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகாத்தம்மன் கோவில் அருகே வாகை மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதன் கிளைகள் அருகில் இருந்த குடியிருப்பு மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை இயந்திரங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர்.