சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி; அன்புமணி கண்டனம்

74பார்த்தது
சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி; அன்புமணி கண்டனம்
தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்துக்கான புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், தமிழ்நாட்டில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம்- கடலூர் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ. 728 கோடியை ரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு ரயில்வே துறை திருப்பி அனுப்பியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்திற்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும்; திட்டச்செலவில் ஒரு பகுதியை ஏற்க வேண்டும். தமிழகத் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்? எந்தெந்தத் திட்டங்கள் எந்தெந்த ஆண்டில் நிறைவேற்றி முடிக்கப்படும்? என்பது குறித்த விவரங்கள் அடங்கிய கால அட்டவணையை ரயில்வே வெளியிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி