தமிழக அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் பொன்முடி, “மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தமிழக அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று(செப்.23) நடைபெற்றது. உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் சா. வின்சென்ட் வரவேற்புரை வழங்கினார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2018, 2019, 2020, 2021ம் ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளை பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 பேருக்கு ‘தமிழக அறிவியல் அறிஞர்’ விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய அமைச்சர், திறமையையும் வளர்க்க வேண்டும். படிக்கிறபோதே தொழில் ரீதியாக மாணவர்கள் வளர வேண்டும். வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி வேலை கொடுப்பவர்களாகவும் மாணவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியான வளர்ச்சி என்பது அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.