சென்னை பல்லாவரம் அருகே இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், இன்ஸ்டா மூலம் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து, அவர்கள் மூலம் கஞ்சா வியாபாரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த பெண்ணிற்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.