தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வாயிலாக பிராட்பேண்ட் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது. இதற்கான கட்டணத்தை முறையாக கட்டாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை ரூ.1.5 கோடி நிலுவை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் இணையதள கட்டணம் நிலுவை இல்லாமல் செலுத்தியுள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.