தமிழகத்தில் 7நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

268பார்த்தது
தமிழகத்தில் 7நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7நாட்களுக்கு ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அக்டோபர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி