கிண்டி தேசிய பூங்காவில் நீர்நிலைகள் உள்ளதா? அரசுக்கு உத்தரவு

76பார்த்தது
கிண்டி தேசிய பூங்காவில் நீர்நிலைகள் உள்ளதா? அரசுக்கு உத்தரவு
கிண்டி தேசிய பூங்கா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலைகள் உள்ளதா என்பது குறித்து நீர்வள ஆதாரத்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் ஏரி மாசுபடுவதாக நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் வழக்காக எடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே. சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று (செப்.20) விசாரணைக்கு வந்தது.

அப்போது, பசுமை தீர்ப்பாயம் கேட்ட அறிக்கை எங்கே? என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் அமர்வின் உறுப்பினர்கள் கேட்டனர். வரும் செப். 23-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்வார் என தெரிவித்தார். அதற்கு சென்னை ஆட்சியர் எப்படி அறிக்கை தாக்கல் செய்ய முடியும்? எனவே கிண்டி தேசிய பூங்காவில் நீர்நிலைகள் உள்ளதா? என ஆய்வு செய்து நீர்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அடுத்த விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை செப். 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி