குடுபத்துடன் கடற்கரைக்கு சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

1068பார்த்தது
குடுபத்துடன் கடற்கரைக்கு சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு சென்றார் விவேகானந்தர் இல்லம் அருகே குடும்பத்துடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், அவர்களின் கண்களில் மண்ணைத் தூவினர். அதிர்ச்சி அடைந்தவர்கள் கண்களை கசக்கி கொண்டு மண்ணை எடுக்கும் முயற்சியில் இருந்தனர்.

அந்த நேரத்தில் அவர் மனைவி வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு மர்ம ஆசாமிகள் தப்பி ஓடி விட்டனர். பையில் ஐந்தாயிரம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மெரினா காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணப்பயை பறித்து சென்று கொடுங்கையூரை சேர்ந்த சிறுவன் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த மோகன் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இன்னொருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி