முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான தங்களின் கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துவதாக கூறியுள்ளார். நீட், பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானவை, கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை, சமூகநீதிக்கு எதிரானவை, நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.