சென்னை வண்ணாரப்பேட்டையில் வாட்சாப் மூலம் போதை ஊசி விற்பதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாழடைந்த கட்டிடத்தில் சிலர் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அங்கு சென்று விசாரித்த போது 2 இளைஞர்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை பயன்படுத்துவது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன், ஆனந்த், முகமது ஆசிக் மற்றும் ஜாவத் ஆகிய 4 போரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், மோட்டார் சைக்கிள், கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டது.