சென்னை: தமிழகத்தில் மிகவும் மது கடைகளில் எண்ணிக்கையை குறைத்து மது ஊக்குவிப்பதை கைவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசு தேர்தல் வாக்குறுவதின் போது மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
ஆனால் இதற்கு நேர்மறையாக தற்போது செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதுவித மதுபானங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாக உள்ளது.
உண்மையிலேயே
திமுக அரசுக்கு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைத்து மது குப்பை தடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.