சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவத்தே பயிர் செய் என்னும் பழமொழி செய்ய வேண்டிய காலத்தே ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற கருத்தினை நமக்கு உணர்த்துகிறது. இந்த பழமொழிக்கு ஏற்ப வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.