கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதிய ரயில் நிலையம்..!

967பார்த்தது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதிய ரயில் நிலையம்..!
சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு சேவை அளிக்கும் வகையில், கிளாபாக்கம் அருகே ரூ. 20கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பிறமாவட்டங்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் பிராதன இடமாக உள்ளது. இதை தவிர்த்து புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது கிளாம்பாக்கத்தில் தென்மாவட்ட பேருந்துகள் செல்ல வசதியாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு-தாம்பரம் வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்ற ரயில்வே நிர்வாகம் ரூ. 20கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி