நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.