தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்வதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக சேலம், கடலூர், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணி இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.