ஆங்கில புத்தாண்டு: அண்ணாமலை வாழ்த்து...!

67பார்த்தது
ஆங்கில புத்தாண்டு: அண்ணாமலை வாழ்த்து...!
சென்னை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024 ஆங்கிலப் புத்தாண்டு, நம் அனைவர் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகிட, வளமும் நலமும் நிறைந்திட, நல் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக அமைந்திட, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டில், தமிழகத்தில் மாற்றம் பிறக்கட்டும். தடைக் கற்கள் தகர்ந்து, புதிய முயற்சிகள் வெற்றியடையட்டும். அனைவருக்கும் மிகச் சிறந்த ஆண்டாக அமையட்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தொடர்புடைய செய்தி