வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

61பார்த்தது
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹7. 50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ₹1, 817 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ₹1, 809க்கு விற்பனையானது. கடந்த நான்கு மாதங்களாக ₹151 வரை குறைந்த நிலையில், இம்மாதம் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான 14. 2 கிலோ சிலிண்டரின் விலை மாற்றமின்றி ₹818. 50ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி