சென்னை: 8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; எடப்பாடி கடும் கேள்வி ?

76பார்த்தது
சென்னை: 8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை;  எடப்பாடி கடும் கேள்வி ?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: -சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி