தவெகவிற்கான அங்கீகாரத்திற்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். தேர்தல் ஆணையம் தான் அதனை முடிவு செய்யும் என்று கூறிய அவர், அரசியலுக்கு புதியவர் என்பதால் விஜய்க்கு ஆதரவாக பேசியதாக விளக்கமளித்தார். புதிய தம்பிக்கு கொடுத்த ஆதரவு என்பது கூட்டணிக்கான அழைப்பு அல்ல என்றும் மறுப்பு தெரிவித்தார். முன்னதாக, விஜய் கட்சியை பார்த்து திமுக பயப்படுவதாக அவர் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.