புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த துணை நடிகை விஜயகுமாரி இன்று உயிரிழந்தார். ஈரோட்டைச் சேர்ந்த அவர், சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்து படங்களிலும், சீரியல்களிலும் துணை நடிகையாக நடித்து வந்தார். அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து லாரன்ஸ், KPY பாலா போன்றோரிடம் உதவி கேட்டிருந்தார். ஆனால், இறுதியில் நோய் அவரது உயிரைக் குடித்துவிட்டது.