டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்துக்குள் அளிக்கவும்

62பார்த்தது
டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்துக்குள் அளிக்கவும்
டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநிலம் முழுவதும் தற்போது பரவலாக மழைப் பொழிவு இருந்து வருகிறது. இதனால், கொசுக்கள், வைரஸ்கள், கிருமிகள் மூலம் பரவும் பல்வேறு தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளும், முதியவா்களும் அத்தகைய நோய்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆளாகின்றனா்.

காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக பலா் அனுமதிக்கப்படுகின்றனா்.

அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைகளை விரைந்து மேற்கொண்டு 6 மணி நேரத்துக்குள் முடிவை அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை தாமதம் தவிா்க்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி