நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.