அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், "தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் வெளிநாடு செல்வதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரிடம் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடுப்பு வழங்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.