சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் கடந்த 28ம் தேதி இரவு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டார். இதன்பிறகு சிறுமியின் செல்போனில் தாய் தொடர்புகொண்டு பேசியபோது ஒருவரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் 'என்னை யாரும் தேட வேண்டாம்' என்று தெரிவித்துவிட்டு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் செல்போன் நம்பரை தொடர்புகொண்டு அவரிடம் பேசி காவல்நிலையம் வரவழைத்து விசாரித்தனர். இதில், புளியந்தோப்பு சிவராஜபுரத்தை சேர்ந்த விஷால் (21) என்பவரை சிறுமி காதலித்துள்ளார்.
இதனால் அவரை திருமணம் செய்துகொண்டதும் தெரிந்தது. இதையடுத்து வாலிபரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். கவுன்சிலிங் வழங்கி சிறுமியை பெற்றோருடன் ஒப்படைத்தனர். இதனிடையே சிறுமியை திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் விஷாலை கைது செய்தனர்.