கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை வந்த டாடா நகர் விரைவு ரயில், நேற்று முன்தினம் பெரம்பூர் ரயில் நிலைய 2வது நடைமேடையில் வந்தது. முன்பதிவில்லாத பெட்டியில் இருந்து இறங்கி வந்த பயணி ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். இதில், 16 கிலோ கஞ்சா சிக்கியது. அந்த நபரை ரயில்வே போலீசார், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரிடம் விசாரித்த போது, அவர், மதுரை, உசிலம்பட்டி சேர்ந்த சுவாமி(44) என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.