பெரம்பூர்: பணம் கேட்ட நண்பன் இரும்பு ராடால் அடித்துக்கொலை..

77பார்த்தது
பெரம்பூர்: பணம் கேட்ட நண்பன் இரும்பு ராடால் அடித்துக்கொலை..
பெரம்பூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). மணிகண்டன், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், ஐசக் ஜெபக்குமார் ஆகியோர் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெய்சங்கரிடம் குடிக்க பணம் கேட்டு மறுத்த நிலையில், ஜெய்சங்கரின் தந்தையை மணிகண்டன் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் மற்றும் ஐசக் இணைந்து மணிகண்டனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி