அக். 11ல் டெல்டா மாவட்டங்களில் பந்த் - மார்க்சிஸ்ட் ஆதரவு

162பார்த்தது
அக். 11ல் டெல்டா மாவட்டங்களில் பந்த் - மார்க்சிஸ்ட் ஆதரவு
காவிரி பிரச்சினையில் அக்டோபர் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படியும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டுமென வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் டெல்டா மாவட்டங்களில் 11. 10. 2023 அன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்தின் நலன் காக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி கர்நாடக மாநில அரசு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டுமெனவும், ஒன்றிய பாஜக அரசு தமிழக விரோதப் போக்கை கைவிட்டு விட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்துவதற்கு போதிய நிர்ப்பந்தம் அளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி