தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வரும் 10.07.2025 முதல் 12.07.2025 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி) வரை நடைபெற உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII-TN வளாகத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337 / 9360221280