சென்னை: பெரம்பூர் ரயில் ரயில் நிலையத்தில் இருகல்லூரியில் பயிலும் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக சென்ற மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மாநில கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தனர். அப்போது பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது, ஒருவரை ஒருவர் கல்வீசி இருகல்லூரி மாணவர்களும் தாக்கி கொண்டனர்.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.