சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நந்தனம் ஒய். எம். சி. ஏ. மைதானத்தில் இன்று மாலை 5 மணி முதல் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக, பின்வரும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இசை நிகழ்ச்சிக்கு தேனம்பேட்டை வழியாக பார்வையாளர்களை ஏற்றி வரும் ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் ரோடு, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம். சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுபக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் "யு" டர்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.
அண்ணாசாலையில் உள்ள ஒய். எம். சி. ஏ பிரதான மற்றும் காஸ்மோ பாலிட்டன் நுழைவாயிலில் விவிஐபி பாஸ், திரை கலைஞர்கள் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.