சென்னை: ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

80பார்த்தது
சென்னை: ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் இரு முறை உயர்ந்து, சவரன் 72,000 ரூபாயை கடந்துள்ளது. அண்மைக்காலமாக ஆபரணத் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. விலையில் மாறுதல்கள் காணப்பட்டாலும் முதலீடு என்ற ஒற்றை புள்ளியில் தங்கத்தின் மீது பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி தங்கம் ஒரு சவரன் ரூ.240 அதிகரித்து, ரூ.71,600 ஆக விற்பனையானது. தற்போது இன்று மாலை மீண்டும் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.880 அதிகரித்துள்ளது. 

அதாவது, ஒரே நாளில் இரு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1120 அதிகரித்துள்ளது. தற்போதுள்ள விலையின்படி சவரன் ரூ.72,000ஐ தாண்டியுள்ளது. ஒரு சவரன் ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ரூ.9,060க்கு விற்பனையாகிறது. காலையில் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.110 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஆபரணத் தங்கம் இரு முறை உயர்ந்து, சவரன் ரூ.72,000ஐ கடந்துள்ளது, பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி