சென்னை: போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார வாகனம்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இயக்க மேலாண்மை மூலம், போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். போதையில்லாத தமிழ்நாடு உருவாகிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்கள் தொடர்பான உறுதிமொழியேற்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இயக்க மேலாண்மை அலகின் மூலம் “போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு” எனும் கருத்தை மையமாகக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.