சென்னை: அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அஜய் வாண்டையார், பிரசாத், சுனாமி சேதுபதி உள்ளிட்ட 9பேர் கைது செய்யப்பட்டனர். புனோவில் தலைமறைவாக இருந்த ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அஜய் வாண்டையாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கபட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.