தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை இயக்குநர் தியாகராஜன் மற்றும் அவரது மகன் நடிகர் பிரசாந்த் நேரில் சந்தித்தனர். மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை முன்னிட்டு, முதல்வரை சந்தித்து அவர்கள் மலர்கொத்து வழங்கி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும், இயக்குநர் தியாகராஜனும் நீண்டகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பிற்கு பின் அரசியல் காரணங்கள் ஏதும் இருக்கிறதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.