சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

80பார்த்தது
சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே?: அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? என முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பாட்டு பாடியபடி சைக்கிளில் பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோவை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் சைக்கிள்களையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்? என வினவியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி