2026 பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணி - இபிஎஸ் உறுதி

83பார்த்தது
2026 பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணி - இபிஎஸ் உறுதி
தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், இந்த தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் குறைவானது ஏன்? சட்டப்பேரவை தொகுதி அளவில் எங்கெங்கு குறைவான வாக்குகள் பதிவாகின? எந்தெந்த நிர்வாகிகள் தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை? திமுகவினருடன் கைகோர்த்து, தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வேலை பார்த்தது யார்? என்பது உள்ளிட்ட கேள்விகளை பழனிசாமி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த நிர்வாகிகள், இந்த தேர்தலில் வலுவான கூட்டணி அமையவில்லை. மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான இலவச பேருந்து வசதி போன்ற அரசின் திட்டங்கள்தான் அதிமுக வாக்குசதவீத இழப்புக்கு காரணம். வரும் 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பழனிசாமி பேசியது, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அப்பணியை கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். அதுகுறித்து நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி