ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் ஜூலை 31-ல் தீர்ப்பு

67பார்த்தது
ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் ஜூலை 31-ல் தீர்ப்பு
முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம், சி. குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ, “கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு ஓ. பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்எல்ஏ-க்கள் அரசுக்கு எதிராகச் செயல்பட்டது, அப்போதைய முதல்வர் பழனிசாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியது போன்ற அரசியல் காரணங்களுக்காக ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என வாதிட்டார்.

தொடர்புடைய செய்தி