விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

74பார்த்தது
மாநில கட்சிகள் என்ற அங்கீகாரத்தை பெற்ற விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி, மாநில கட்சிகள் என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கான தகுதியை பெற்றன.

இந்நிலையில், இந்த இரண்டு கட்சிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி