சென்னை: கொட்டி பெய்ய காத்திருக்கும் மழை

51பார்த்தது
சென்னை: கொட்டி பெய்ய காத்திருக்கும் மழை
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 7) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கரூர், நீலகிரி, சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 17 மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை எச்சரித்துள்ளது. 

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி