முதல்வர் மருமகனுடன் தொழிலதிபர் சந்திப்பு: ஜெயக்குமார் கேள்வி

68பார்த்தது
இந்தியாவின் பெரும் தொழிலதிபர் ஒருவர் முதலமைச்சர் மருமகனைச் சந்தித்து விட்டு போவதன் காரணம் என்ன என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று வடசென்னை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வடசென்னை, தென்சென்னை தொகுதி பொறுப்பாளர்களும், மாவட்டச் செயலாளருமான டி. ஜெயக்குமார், வடசென்னை தொகுதி வேட்பாளர் ராயபுரம் ஆர். மனோ மற்றும் பல நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பேசியதாவது, வருகின்ற 2026 பொதுத்தேர்தலில் எவ்வாறு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டன என்றும், மீண்டும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவுரைகள் சொல்லப்பட்டதாகக் கூறினார்.
Job Suitcase

Jobs near you