அரசுத்துறையில் 6. 25 லட்சம் பணியிடங்கள்: ராமதாஸ் கண்டனம்

74பார்த்தது
அரசுத்துறையில் 6. 25 லட்சம் பணியிடங்கள்: ராமதாஸ் கண்டனம்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தேர்வு செய்வதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் மற்றும் துரோகம் காரணமாக தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 6. 25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சேர்த்தே 40 ஆயிரம் பேருக்கு தான் அரசு வேலைகளை திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத அளவுக்கு பெரும் துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறது. 2024ம் ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாயிலாக 10, 375 ஆசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரே ஒரு ஆசிரியர் கூட நடப்பாண்டில் நியமிக்கப் படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. 2023ம் ஆண்டு அக்டோபர் 25ம் நாள் அரசுப் பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தேர்வு செய்வதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் மற்றும் துரோகம் காரணமாக தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 6. 25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி