மேடவாக்கம்: எம்பிஏ பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி

63பார்த்தது
மேடவாக்கம்: எம்பிஏ பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். எம்பிஏ பட்டதாரி. இவர் வீட்டின் அருகே வசிக்கும் பாஜக பிரமுகர் லதா என்பவரிடம் ரூ. 26 லட்சம் கொடுத்து அரசு வேலை வாங்கித் தரும்படி கூறியுள்ளார். இவரிடம் பணத்தை பெற்றுக்கொண்ட லதா தனது நண்பர் ஜெயச்சந்திரன் மற்றும் ரேவதி என்பவருடன் இணைந்து வேலை வாங்கித்தருவது போல் நடித்து ஏமாற்றியுள்ளார். 

இவர்கள் மூவரும் இதுபோல் பலரிடமும் மோசடி செய்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜெயச்சந்திரன் (42), அவரது தோழி ஜோஷிதா (28), ஜெராக்ஸ் கடை உரிமையாளர் ரேவதி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆட்களை பிடித்து கொடுத்து தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகர்களான லதா மற்றும் கவுரியை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி