சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்படுவதால் 20 கிராம கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 231 கன அடி நீர் வரும் நிலையில் ஏரி 22 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று உபரி நீர் திறக்கப்படுவதால் அடையாரின் கரையோரத்தில் உள்ள 20 கிராம மக்களுக்கு எச்சரிக்கை வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைசெல்வி தெரிவித்துள்ளார்.