நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக ஹரியானா தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், நடுநிலையான விசாரணை நடத்தி, தவறு செய்தோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.