சென்னை: திருவான்மியூரில் தனியார் நிறுவன அதிகாரியை கடத்திய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்(26). இவர் திருவான்மியூரில் இயங்கி வரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரை மர்மநபர்கள் காரில் கடத்தி செல்வதாக செல்போன் மூலம் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் செல்போன் எண்ணை கொண்டு அவரை மர்மநபர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.